V. O. Chidambaram Pillai: முதல்வர் மரியாதை!

Advertisements

V. O. Chidambaram Pillai

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாளை ஒட்டி, அவரது திருவுருவ படத்திற்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில், அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில், அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செயலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் பெரியகருப்பன், எ.வ.வேலு, சேகர்பாபு, சக்கரபாணி, மதிவேந்தன், சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *