
உத்தித ஹஸ்த பாதாங்குசானத்தில் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய இரு சக்கரங்கள் தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன.
வட மொழியில் உத்தித என்றால் நீட்டுதல் என்றும் ஹஸ்த என்றால் கை பாத என்றால் கால்பாதம். அங்குஸ்தம் என்றால் பெருவிரல் என்று பெயர். அதாவது கையால் கால் விரலின் பெரு விரலைப் பிடித்து காலை நீட்டுதல் என்று பொருள் படும்.
செய்முறை;
நேராக நின்று வலது காலின் உள்புறமாக கொண்டுவந்து வலது கால் பெருவிரலை வலது கை சுட்டு விரல், நடு விரல் மற்றும் கட்டை விரலால் வளைத்துப் பற்றவும்.
இடது கையை தொங்க விடவும்.
30 வினாடிகள் இந்த நிலையில் இருந்தபின் காலை , மாற்றி செய்யவும்.

குறிப்பு;
இடுப்பு அல்லது மூட்டுகளில் தீவிர பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யகூடாது.
பயன்கள்;
கல்லீரல் சரியாக செயல்பட உதவுகிறது.
மண்ணீரல் சக்தி பெறுகிறது.
நரம்பு மண்டலத்தை சரி செய்கிறது.
முதுகெலும்பை பலப்படுத்துகிறது
முதுகுப் பகுதியை உறுதியாக்குகிறது.
கால்களை ந்நிட்சியடையச் செய்கிறது.
ஜீரணம் சம்பந்தமான கோளாறுகளை சரி செய்கிறது.
உடல், மனம் இரண்டின் சமநிலையைப் பாதுகாக்கிறது.
நினைவுத்திறனை கூர்மையாக்குகிறது.
மனதை அமைதியாக்குகிறது.



