Uttarakhand: வீடு திரும்பிய தொழிலாளர்கள்!

Advertisements

பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்த 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி தரப்பட்டுள்ளது.

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.

அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்களுக்கு உயர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்த 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி தரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உடல் மற்றும் மனரீதியாக நலமாக இருப்பதால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *