Uttar Pradesh: 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி.. சுகாதார அமைப்பு கவலை!

Advertisements

அதிக எண்ணிக்கையில் சிறையில் கைதிகள் எச்.ஐ.வி தொற்றுடன் காணப்படுவது, ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சூழலில் வருத்தம் ஏற்பட செய்துள்ளது.

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோ சிறையில் உள்ள கைதிகளிடம், கடந்த ஆண்டு டிசம்பரில் சுகாதார பரிசோதனைகள் நடந்தன. கடந்த செப்டம்பரில் இருந்து பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் கிடைக்க பெறாமல் இருந்தன. இதனால், பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இறுதியாக, டிசம்பரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பரிசோதனையில் சிறையில் உள்ள 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது சக கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது.

தொற்று பாதிக்கப்பட்ட கைதிகளில் பலர், போதை பொருட்களுக்கு அடிமையான தனிநபர்கள் ஆவர். அவர்கள் சிறை வளாகத்திற்கு வெளியே, தொற்று ஏற்பட்ட ஊசிகளை பயன்படுத்தி, அதனால் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சிறைக்கு வந்த பின்னர், எந்த கைதிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பாதிப்பு ஏற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் சீராக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறை நிர்வாகம், தொடர்ந்து செயல்பட்டு, தொற்று ஏற்பட்ட கைதிகளின் உடல் நலனை கண்காணித்து வருகிறது.

சிறையில், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டபோதிலும், கடந்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி. பாதிப்பால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் சிறையில் கைதிகள் தொற்றுடன் காணப்படுவது, ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சூழலில் வருத்தம் ஏற்பட செய்துள்ளது.

இதனால், தொற்று ஏற்பட்டதற்கான அடிப்படை காரணம் பற்றி முழு அளவில் அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது., இந்த வைரசினால் பரவகூடிய தொற்றானது பிற கைதிகள் இடையே பரவிவிடாமல் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *