அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. செனட் சபையின் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 53 இடங்களைக் கைப்பற்றியது. 

41 இடங்களைக் கைப்பற்றிய டிரம்பின் குடியரசுக் கட்சி செனட் சபையில் அதிகாரத்தை இழந்தது. இதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயகக் கட்சி 219 இடங்களில் வெற்றி பெற்றது. குடியரசுக் கட்சி 126 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் ஆளுநர் தேர்தலிலும் குடியரசுக் கட்சியை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றவும், அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சித் தோல்வி அடைந்திருப்பதற்குத் தான் போட்டியிடாததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.


