தங்க விலை மீண்டும் உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள் !

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 300 ரூபாய் அதிகரித்து, 13 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்து, ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், ஒரு கிராம் வெள்ளி 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *