Usman Khawaja: உஸ்மான் கவாஜாவுக்கு தடை!

அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட், ஷூ பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டிக்கான பிளேயிங் 11-ஐ ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதில், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் 11-ல் இடம் பெற்றிருந்த வீரர்களே மாற்றமின்றி தொடருகின்றனர்.

இந்தநிலையில் அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட், ஷூ பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உஸ்மான் கவாஜா தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என எழுதியிருந்தார். அவர் அந்த ஷூ அணிந்து போட்டியில் பங்கேற்க ஐசிசி தடை விதித்த நிலையில், கையில் கருப்பு பட்டை அணிந்தபடி முதல் டெஸ்டில் பங்கேற்ற கவாஜா, ஐசிசி-க்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவர் ஐசிசி-யிடம் அனுமதி கோரி இருந்தார். இந்நிலையில், அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவருக்கு அனுமதி வழங்க ஐசிசி மறுத்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *