
இனி பணம் கொடுத்துப் பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை!
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பணம் கொடுத்து வாங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணம் இல்லா பண பரிவர்த்தனை வாயிலாக ஜி பே, பேடிஎம் மூலம் இனி பணம் செலுத்து வாங்கிக்கொள்ளலாமெனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்பத் தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகாமக மாறியும், வளர்ந்தும் வருகிறது. அந்த வகையில் பணம் இல்லாத பணபரிவர்த்தனையை நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. 10 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினாலும் ஜி பே மூலம் பணம் கொடுக்கும் பழக்கம் அதிகமாக வருகிறது. தனியார் கடைகளில் செயல்படுத்தப்படும் இந்தப் பணம் பரிவர்த்தனை தற்போது அரசு சேவைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் ரேஷன் கடைகளிலும் இனி யுபிஐ வசதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக்கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களைப் பெற்றுக்கொள்வது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீ


