தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் லட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
திமுகவின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்… “Let your work define you” உழைப்பால் உயர்ந்திடு! லட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


