சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் தலைநகரமான லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இந்தோனேசியாவின் புஸ்பிதாசரி உடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய தன்வி ஷர்மா 18 – 21, 21 – 18, 21 – 18 என்ற செட் கணக்கில் புஸ்பிதாசரியை வீழ்த்தினார். இதன்மூலம், இந்தியாவின் தன்வி ஷர்மா வெற்றி பெற்று காலிறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.


