விஜய் குற்றவாளி பக்கம் நிற்கிறார் – உதயநிதி கடும் விமர்சனம்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றவாளி பக்கம் நிற்பதாகவும், படுத்து உறங்கிக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று சென்னை கிண்டியில் ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மனு அளித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மக்கள் பிரச்சனைத் தொடர்பாகப் புகார் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி, திமுக சட்டத்துறைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றவாளி பக்கம் நிற்பதாகக் குற்றஞ்சாட்டினார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *