விடுப்பு எடுத்த விமானிகள்..79 விமானங்கள் ரத்து!

மும்பை:

பணி தொடர்பான ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானிகள் அனைவரும் உடல்நலக்குறைவு எனக்கூறி விடுப்பு எடுத்ததால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

டாடா நிறுவனம் வாங்கிய ஏர் இந்தியாவின் துணை நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். டாடா நிறுவனம், பணி தொடபாகப் புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டு உள்ளது. இதற்கு விமானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், விமானிகள் அனைவரும் உடல்நலக்குறைவு எனக்கூறி விடுப்பு எடுத்துவிட்டு தங்களது மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

இதனால், வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கும் செல்ல வேண்டிய 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து பல பயணிகள் விமான நிலையங்களை வந்தடைந்த பிறகே தெரியவந்தது. இதனால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களின் கோபம், அதிருப்தியை சமூக வலைதளங்கள்மூலம் தெரியபடுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளின் பணம் திருப்பித் தரப்படும் அல்லது வேறு தேதிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ந நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *