திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றும் உத்தரவைச் செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மாறாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. உச்சியில் உள்ள தூண் மீது யாரும் தீபம் ஏற்றவிடாமல் காவல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராம ரவிக்குமார் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், இந்து அறநிலையத்துறை ஆணையர் வினய், முருகன் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரினார்.
மனு தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக நீதிபதிகள் கூறினர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதியக் கோரி இராம ரவிக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

