DMK Govt Schemes For Women: “அசத்தும் திமுக அரசு” ஓர் அலசல்!

Advertisements

DMK Govt Schemes For Women: முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என தொடர்ந்து மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டங்கள் குறித்த ஓர் அலசலை இங்கு காணலாம். 

 

DMK Govt Schemes For Women: கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மட்டும் அல்லாமல் பெண்களுக்காக இலவச பேருந்து பயணத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்காகப் புதுப்பெண் திட்டம் என அசத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபற்றிய உரையாடல்களுக்கு இடையே கடந்த ஓர் ஆண்டாய் மாதம் 1000 ரூபாய் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் புதுமைப் பெண் திட்டம்மூலம் கிடைத்து வருகிறது. 1000 ரூபாய் கல்லூரி மாணவிகளுக்குக் கிடைப்பதால் அவர்கள் அளவற்ற பயன்கள் அடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். பல மைல் தூரம் சென்று படிக்கும் மாணவிகள், காலைச் சாப்பிட முடியாமல் சீக்கிரம் பயணிக்க வேண்டிய அவலம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த 1000 ரூபாய் மூலம் காலை உணவு, தேவையான புத்தகங்கள், தங்கள் அத்தியாவசிய தேவைகளைப் பெற்றோர்களிடம் எதிர்பார்க்காமல் செய்துகொள்வது என நிம்மதியாக உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் பல ஏழை எளிய மாணவிகளுக்குப் பலனளித்து வருகிறது. 

 

இப்படிபட்ட சூழலில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கியுள்ளது. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த முறை ஒருநாளுக்கு முன்னரே சோதனை ஓட்டமாக 1000 ரூபாய் பல பெண்களின் வங்கிக்கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசிகளால் தவித்து வரும் ஏழை எளிய குடும்பப் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன்பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மாதா மாதம் 1000 ரூபாய் பெற உள்ளனர்.

 

எதிர்கட்சிகள் இந்த 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விமர்சித்து வந்த நிலையில், தற்போது இந்தத் திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தையும் சிலர் விமர்சித்தனர். ஆனால் இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமப்புற பெண்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இப்படி தொடர்ந்து திமுக பெண்களுக்குப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. இந்தத் திட்டங்களைப் போலத் தான் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டமும். 

 

அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகளுக்குக் காலையில் டிபன் வழங்கப்படுகிறது. இதனால் பசியோடு வகுப்பு செல்லும் குழந்தைகள் இனி வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாகச் சென்று படிக்கிறார்கள். கிராமப்புறங்களில் பல தாய்மார்கள் விடியற்காலையிலேயே வயல் வேலைகளுக்குச் செல்ல வேண்டி உள்ளதால், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குக் காலை உணவை வழங்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இப்போது அந்தக் கவலையும் அந்தப் பெண்களுக்கு இல்லை. ஏற்கனவே பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் இருப்பதால் ஒரு முழு நாள் மாணவர்கள் பசி இல்லாமல் நிம்மதியாகப் படிக்கின்றனர்.

 

1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் எப்படி சாத்தியம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் இன்று அதைச் சாத்தியமாக்கி வாயடைக்க செய்துள்ளது திமுக அரசு. அதேபோல மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும், புதிதாக மீண்டும் விண்ணபிக்க முடியுமா போன்ற பல கேள்விகளுக்குத் தமிழக அரசு முறையான விளக்கத்தையும் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் நிச்சயம் தமிழக மகளிருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *