India Alliance meeting:இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்!

புதுடெல்லி:டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், தேஜ்ஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *