தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *