118-ஐ எட்டுமா தவெக….? ஆளுநருடன் விஜய் மீண்டும் 40 நிமிட சந்திப்பு……!

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், தற்போது காங்கிரஸின் ஆதரவுடன் 112 என்ற பலத்தில் உள்ளது.

எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த இழுபறி நீடிக்கும் சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்துப் பேசினார்.

நீலாங்கரை இல்லத்திலிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். “தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” என்றும், “பதவியேற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்றும் அவர் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், ஆளுநர் தரப்பில், “யாருடைய ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ள நிலையில், ஆளுநரின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *