இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தபடும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்தை தொடங்க உள்ளார்.
இதனை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில், 75 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், அனைத்து அங்கன்வாடிகளிலும் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.
இந்த இயக்கத்தில் தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்த வேண்டும் என அமைச்சர் ஜெ.பி.நட்டா அமைப்பு விடுத்தார்.

