
தமிழக அரசியலில் கால் பதித்திருக்கும் நடிகர் விஜய் எந்த அளவிற்கு வெற்றி பெறுவார் திமுக அதிமுக பாஜக போன்ற மிகப்பெரிய கட்சிகளை எதிர்கொண்டு அவரால் அரசியல் நடத்த முடியுமா 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி அமையப் போகிறது என்றெல்லாம் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது தமிழக வெற்றி கழகம்.இந்த நிலையில் நடிகர் விஜய் தனது கையில் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறார் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றிய தகவல்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தமிழக வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக இளைய தலைமுறையினரும் முதன்முதலாக வாக்களிக்க போகும் வாக்காளர்களும் நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் இது மட்டுமல்லாமல் பொதுவான வாக்காளர்களில் திமுக அதிமுக அல்லாமல் புதிதாக ஏன் ஒருவர் வரக்கூடாது என்ற கேள்வியும் பேசும் பொருளாகி இருக்கிறது.அந்த வகையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு தற்பொழுது மீண்டும் தமிழக வெற்றிக்கழகம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது
திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி ஆகியவை 234 தொகுதிகளையும் குறிவைத்து வேட்பாளர்களை தயார் செய்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நடிகர் விஜய் மிகப்பெரிய திட்டம் ஒன்றை கையில் வைத்திருக்கிறார்.முதல் கட்டமாக விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கட்டாயம் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் என்று திரை மறைவில் மிக உறுதியாக சொல்லப்படுகிறது அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலான தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தருவதற்கும் விஜய் தயாராக இருக்கிறார் என்கிறார்கள். ஜனவரி மாதத்தில் சென்னைக்கு வர திட்டமிட்டு இருக்கும் ராகுல் காந்தி நிச்சயமாக தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவாக முடிவெடுத்து பேசுவார் என்று சொல்கிறார்கள். இதன் பின்னணியில் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி வெளியே தெரியவில்லை
விஜயை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் நடைபெறும் தேர்தலிலும் 10 இடங்களில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன அதேபோல் புதுச்சேரியிலும் 10 தொகுதிகள் வரை தமிழக வெற்றி கழகம் போட்டியிடுவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன மூன்று மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான திரை மறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்கிறார்கள்.
தற்பொழுது கேரள மாநிலத்தில் உள்ள சமூக வலைத்தளங்களில் விஜய் தொடர்பான செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இது மட்டுமல்லாமல் கேரளாவில் பல இடங்களில் விஜய் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சிறிய கூட்டங்களை நடத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இதுபோன்றே புதுச்சேரியிலும் நடிகர் விஜய் அல்லாது யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தமிழக வெற்றி கழகம் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதாவது புதுச்சேரியிலும் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்தை களம் இறக்குவார் என தெரிகிறது.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் தற்போது செங்கோட்டையன் நாஞ்சில் சம்பத் போன்ற தலைவர்கள் இணைந்துள்ளதால் புஸ்ஸி ஆனந்த் விஷயத்தில் விஜய் புதிய முடிவுகள் எடுத்திருக்கிறார் ஏற்கனவே புசி ஆனந்திற்கும் ஆதவ் ஜனா மற்றும் நிர்வாகிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்ட நிலையில் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி பக்கம் திருப்பி விடலாம் என நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனக்கும் முக்கிய அமைச்சர் பதவி தருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையே விஜய் தரப்பில் ஒரு ஆய்வு குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது ஆய்வறிக்கையை விஜய் வசம் கொடுத்திருக்கிறார்கள் அந்த ஆய்வறிக்கையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
எனவே காங்கிரஸ் கட்சியையும் கூட்டணியாக சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நடிகர் விஜய் ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறார்.அவரது கணக்கும் திட்டங்களும் நடைமுறையில் எப்படி சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இதனிடையே இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான தேர்தல் அறிக்கை விஜய் தரப்பில் தயாராகி வருகிறது
அதில் நடைமுறைக்கு சாத்தியமோ சாத்தியம் இல்லையோ ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சொந்த வீடு ஒரு சொந்த மோட்டார் சைக்கிள் மேலும் சொந்தமாக ஒரு கார் என்றெல்லாம் அறிவிக்க காத்திருக்கிறார்கள்.இது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை மையமாக வைத்து ஏராளமான திட்டங்கள் தேர்தல் அறிக்கையாக தயாராகி வருகின்றன
விஜய் வெளியிட போகும் தேர்தல் அறிக்கை திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளை அலற வைக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.மேலும் தற்போது உள்ள விஜய் கட்சி மாவட்டச் செயலாளர்களில் இருந்து ஏராளமான பேர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் அந்த கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் தான் பெரும்பாலும் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என தெரிய வந்திருக்கிறது




