M.S தோனி ஓய்வு.. கடைசி ஆசை நிறைவேறாமலே போச்சே.. சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி ஐபிஎல்லுக்கு விடை கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கிலும் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்தார். அவரது ஓய்வு குறித்த அறிவிப்பை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் எக்ஸ் பக்கத்தில்,  வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வீரர். ஒரு புதிய பொறுப்பு. என்றென்றும் நீடிக்கும் பிணைப்பு. மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பை ஏற்கிறார். எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலங்கள் மற்றும் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் நினைவுகள் என, நமது பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எம்.எஸ். அதன் மையப்புள்ளியாக இருந்து வருகிறார்.

அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டுவது வரை, தல எப்போதும் நமது அடையாளத்தின் ஒரு அங்கமாகவே இருப்பார். சென்னை எப்போதும் அவருக்கு இல்லமாகவே இருக்கும். என குறிப்பிட்டுள்ளது.

ஒரு நிறைவேறாத ஆசையுடன் தோனி ஓய்வை அறிவிப்பதுதான் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.

இந்திய அணிக்காக 2019 உலகக்கோப்பையில் தோனி கடைசியாக ஆடியிருந்தார். 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்தார். அப்போதிருந்தே ஐ.பி.எல் போட்டிகளிலும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. 2020 இல் துபாயில் நடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடி ப்ளே ஆப்ஸூக்கு கூட செல்லாமல் தோற்றிருக்கும். அந்த சீசனின் கடைசிப் போட்டியில், இதுதான் உங்களின் கடைசிப் போட்டியா என டேனி மோரிசன் கேட்க, ‘ஞிமீயீவீஸீவீtமீறீஹ் ழிஷீt’ என தோனி பதில் கூறியிருப்பார். 2021 சீசனை சென்னை அணி வென்றிருக்கும்.

அப்போது சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.. அதில்  தோனி, தமிழ்நாடு எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு விளையாட்டை எப்படி அணுக வேண்டுமென சென்னை ரசிகர்கள் கற்பித்திருக்கிறார்கள். ராஞ்சிக்கு பிறகு சென்னை எனக்கு இன்னொரு வீடு போல மாறிவிட்டது. என்னுடைய கடைசிப் போட்டியை சென்னை மைதானத்தில் வைத்து ஆட விரும்புகிறேன். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தானாலும் சரி. சென்னை ரசிகர்கள் முன்பே ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்.

அதன் பிறகுமே தோனி 5 சீசன்கள் ஆடியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததை போல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவரால் கடைசிப் போட்டியை ஆடி ஓய்வை அறிவிக்க முடியவில்லை. 2027 சீசனில் அந்த ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. 2027 க்குப் பிறகு மெகா ஏலம் என்பதால் தோனியும் இன்னும் ஒரு சீசனில் ஆடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல தோனி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது.. இதுதவிர, சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது..

தோனி கேப்டனாக மட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும்  திகழ்கிறார். அது மடடுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5,314 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல், சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை 272 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

அவரது ஹெலிகாப்டர் ஷாட்கள் சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் வரலாற்றின் என்றும் மறக்க முடியாதாக உள்ளது.. பரபரப்பான ஆட்டங்களின் போது ரசிகர்கள் பதற்றத்தில் நகங்களைக் கடித்துக் கொண்டிருக்க, அவர் வெளிப்படுத்திய அமைதியான அணுகுமுறை, பேட்ஸ்மேன்களைத் திகைக்க வைக்கும் மின்னல் வேக ஸ்டம்பிங், வித்தியாசமான உத்திகள் எனப் பல்வேறு அம்சங்கள் மூலம் ரசிகர்களுக்கு தோனி நம்பிக்கையூட்டினார்.

கடைசியில் அவரது ஆநை நிறைவேறாமலே ஓய்வு பெற்றுவிட்டார் தோனி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *