Rajinikanth:ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறார் வேட்டையன்…எப்போ ரிலீஸ் தெரியுமா?

அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறையெனத் தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்.10-ந்தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வேட்டையன் படம் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறையெனத் தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *