TVK – Ramnad: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Advertisements

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடக்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜெயபாலா தலைமையில் அரண்மனை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியினை துவங்கி இருக்கிறார். அதற்கு அவர்களின் விஜய் மக்கள் இயக்கத்தையும் ரசிகர்கள் தற்போது தமிழக வெற்றி களமாக உருவெடுத்துள்ள நிலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட தலைவர் ஜெயபாலா தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் மாவட்ட நிர்வாகி மலர்வழி, மாவட்ட இணை செயலாளர் வாகை குணசேகரன், மாவட்டம் மாணவரணி தலைவர் தமீம், மாவட்ட மகளிர் அணி தலைவி ரிஹானா, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அரண்மனை முன்பு விஜய் கட்சியினர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கியதன் மூலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கையில் புதிய கட்சியை துவங்கிய விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துத்தனர். வருகின்ற 2026 நடை பெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களுக்கு தேவையானவற்றை செய்து நல்லாட்சி வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறோம் என பெருமையுடன் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகி மலர்விழி தெரிவிக்கையில் பெண்களின் ஆதரவு தளபதி விஜய்க்கு முற்றிலுமாக இருக்கின்றது. மகளிருகாண புதிய திட்டங்களை வகுத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண்போம் என தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *