
நைஜீரியாவில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகள் கிறிஸ்தவா்களைக் கொல்வதைத் தடுக்காவிட்டால், அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நைஜீரியாவில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகள் கிறிஸ்தவா்களை கொல்வதைக் கண்டித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ட்ரூத்’ சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதில், கிறிஸ்தவா்கள் கொல்லப்படுவதை நைஜீரிய அரசு தொடா்ந்து ஆதரிப்பதாகவும், இதேநிலை தொடா்ந்தால் அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிவரும் அனைத்து உதவிகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாங்கள் தாக்குதலைத் தொடங்கினால் அது அதிரடியாகவும், பயங்கரவாதிகளுக்கு உடனடி முடிவு கட்டுவதாகவும் இருக்கும் எனத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதிபர் டிரம்ப் எச்சரிக்கையைத் தொடா்ந்து நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், நைஜீரியாவில் போகோ ஹராம் உள்ளிட்ட சில இஸ்லாமிய மத பயங்கரவாத இயக்கங்களால் கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட பிற மதத்தினா் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பயங்கரவாத அமைப்பினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள், ராணுவம், அரசு அலுவலங்களில் குண்டு வைப்பது, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது என அட்டூழியங்களைச் செய்து வருவதாகக் நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபு குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சா்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.



