எஸ்ஐஆா்: படிவங்களை சமா்ப்பிக்க நாளை இறுதி நாள்.!

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க நாளை கடைசி நாள் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் தங்கள் பெயா்களைச் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாகப் பெயா்களைச் சோ்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக 12 இலட்சத்து 43 ஆயிரத்து 363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயா் சோ்ப்பு பணி, தற்போது வருகின்ற 30 ஆம் தேதி வரை நீடித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 17 ஆம் தேதியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *