Advertisements

ஐக்கிய நாடுகள் சபையில், எனக்கு எதிராக நாசவேலை செய்ததை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அவரும், அவரது மனைவியும் ஐ.நா சபையில் உரையாற்ற மாடிக்குச் செல்லும் போது எஸ்கலேட்டர் செயலிழந்தது.
இதைத்தொடர்ந்து, அரங்கில் முக்கியமான தலைவர்களும் உலகம் முழுவதும் நேரலையில் கோடிக்கணக்கான மக்களும் இருந்த நிலையில், அவர் கூட்டத்தின் முன் நின்றபோது, அவரது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை.
பின்னர், உரையை நிகழ்த்திய பிறகு, அரங்கில் அவரது மைக் வேலை செய்யவில்லை. எனவே அவர், இது முற்றிலும் நாசவேலை என்றார்.
இதையடுத்து, அதிபர் டிரம்ப் ஐநா பொதுச்செயலாளருக்கு கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளார். மேலும், ரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
Advertisements




