
பீகாரில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால் பீகாரில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதியளித்துள்ளார். பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சியாஹரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பி;ன்னர், சீதாமரியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, நவம்பர் மாதம் 14-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, மதியம் 1 மணிக்கு பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும் என்றும், ஆர்.ஜே.டி. தூக்கி எறியப்படும் என்றும், பேரரசர் சந்திரகுப்த மௌரியர் காலத்திலிருந்து, நரேந்திர மோடி வரை, கந்தக், கோஷி மற்றும் கங்கை நதிகள் பீகாரில் வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,பீகாரை வெள்ளமற்றதாக மாற்ற ஒரு ஆணையத்தை அமைக்கும் எனவும், கோஷி நதியின் நீர் மிதிலாஞ்சல் பகுதியில் உள்ள 50-ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு, நீர்ப்பாசனம் செய்யப் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால், பீகாரில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும். லாலுவின் ஆட்சிக் காலத்தில், மத்திய அரசு பீகாருக்கு ரூபாய் 2-லட்சத்து 80 ஆயிரம் கோடி வழங்கிய நிலையில், 10 ஆண்டுகளில் ரூபாய் 18-லட்சத்து 70-ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


