
சென்னை:வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கிலோ, 85 ரூபாயாக குறைந்துள்ளது.
நாடு முழுதும் இரண்டு மாதமாக, தக்காளி விளைச்சல் குறைவால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. 1 கிலோ தக்காளி, 160 ரூபாய் வரை விற்கப்பட்டது.தற்போது, தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், விலை குறைய துவங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ தக்காளி, 70 – 85 ரூபாய்க்கு விற்பனையானது.வெளிமார்க்கெட் வியாபாரிகள் கிலோவிற்கு, 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தனர். ஆகஸ்ட்டில் தக்காளி விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

