கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 3 லட்சம் டன் குப்பை தோண்டி எடுப்பு!

Advertisements

சென்னை:

வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாகக் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது.

அந்தக் குப்பை கிடங்கைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

எந்தவித விதிமுறை அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பையென வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்குக் குப்பை கொட்டி வந்ததால், குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இனிவரும் காலங்களில் குப்பைகளைக் கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியை சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு ரூ.648 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதியும் பெற்று இருந்தது.

இதன் தொடர்ச்சியாகத் தற்போது குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் கூறியது,

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தைப் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில ஆரம்பகால நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவை இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டுவிடும்.

அதன் பின்னர் மார்ச் 1-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பைகளைக் கையாளும் திறனுடன் பணிகள் வேகமெடுக்கும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *