today rasipalan:இன்றைய ராசிபலன் – 14.08.2024

Advertisements

மேஷம்


இன்று அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளைத் துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்


வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். குடும்பத் தலைவி சேமிக்கத் துவங்குவர். எதிர்பார்த்த வேலை தாமதமின்றி விரைவில் முடியும். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மிதுனம்


தாய்வீட்டு உறவினர்கள் வருகை உண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். அதிகப் பயணங்களால் லாபம் கூடும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் சுய தொழில்களில் முதலீட்டினை மேற்கொள்வர். மாணவர்கள் பகுதி நேர தொழில்நுட்பப் பயிற்சியில் சேருவர்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்


நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மிகும். நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

சிம்மம்


பிள்ளைகள் நன்கு படிப்பர். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். வங்கிக் கடனை அடைக்கத் துவங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி


பெண்களுக்குத் தாங்கள் எதிர்பார்த்த வரன் அமையும். தேகம் பளிச்சிடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்


பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கடன் கட்டுக்குள் அடங்கும்.

வங்கிப் பணியாளர்கள் மேன்மை அடைவர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு


அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், நினைத்த இடத்திற்கு பார்க்க வேண்டிய நபர்களைச் சந்தித்து நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்


வேலையில்லாதவருக்கு ஒரு நிரந்தரமான உத்யோகம் கிடைக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்


அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பணம் பாக்கெட்டை நிரப்பும். வாகனச் செலவு வந்து போகும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்


பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பெற்றோர்களின் நலனில் அக்கறைக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய சரக்குகளை விற்று விடுவீர்கள். தம்பதிகள் பொறுப்புணர்வர். வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *