Today rasipalan:இன்றைய ராசிபலன் – 26.09.2024

Advertisements

Today rasipalan:இன்றைய ராசிபலன் – 26.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 10-ந்தேதி வியாழக் கிழமை.

திதி இன்று மாலை 5.26 க்கு மேல் தசமி திதி.

புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 4.36 க்கு மேல் பூசம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம். .

நல்ல நேரம் :காலை : 10.45-11.45

நல்ல நேரம் : மாலை : 5.00-6.00

ராகுகாலம் : மதியம் : 1.30-3.00

: குளிகை காலை : 9.00-10.30

எமகண்டம் : காலை : 6.00-7.30

சூலம் : தெற்கு

சூரிய உதயம் : 6.12

அதிர்ஷ்ட எண்கள் : 3,5,8.

சந்திராஷ்டமம்: இரவு 10.35 வரை விருச்சிகம்; பிறகு தனுசு.

பொதுப்பலன்: கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கனவுகள் நனவாகும் நாள். ரிஷப ராசிக்காரர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடியும் நாள்.

இன்றைய பலன்கள்

மேஷம்


வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம்குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகை கிடைக்கும்.

ரிஷபம்


நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

மிதுனம்


திருமண முயற்சி கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

கடகம்


முயற்சிகளில் வெற்றி கிடைக் கும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பகையொன்று நட்பாகும்.

சிம்மம்


ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். வியாபரத்திலிருந்து மறைமுக போட்டிகள் மாறும். குடும்பநலன் கருதி வருமானத்தைப் பெருக்க முன்வருவீர்கள்.

கன்னி


காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமையைச் சரிவரச்செய்வீர்கள்.பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.

துலாம்


விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். புது முயற்சி களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சி யைக்கண்டு பெருமைப்படுவீர்கள்.

விருச்சிகம்


யோசித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியா மல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

தனுசு


முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவார்கள். உத்தி யோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்


செல்வாக்கு உயரும் நாள். நீங் கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கும்பம்


தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரேக்கியத்தில் அக்கரை தேவை.மறதி அதிகரிக்கும்.

மீனம்


விழிப்புணர்ச்சியுடன் செயல் பட வேண்டிய நாள். வேலைப்பளுஅதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *