மேஷம் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களைத் தைரியமாகச் செய்வீர்கள். உங்கள் பணிகளில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் சந்தோசம் கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் சக பணியாளர்களுடன் சில சண்டைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் துணையுடன் அமைதியாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். சத்தான உணவுகள் சாப்பிடுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் உறுதியின் காரணமாக வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணிகளில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படும்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். இதனால் கொஞ்சம் பதட்டமாகக் காணப்படுவீர்கள். எனவே முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சில சண்டைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். அதனால் கொஞ்சம் கவலையாக இருப்பீர்கள். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிகளில் சில பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனால் பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கவனமாகச் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. உங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. பணவரவு குறைந்தது காணப்படும். செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிர்ஷ்டகரமாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். அதனால் நம்பிக்கையாகச் செயல்படுவது நல்லது. பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்காது. எல்லாவற்றையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணிகள் அதிகமாகக் காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். மனதில் தேவைற்ற குழப்பங்கள் இருக்கும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். அரோக்கியம் நன்றாக இருக்கும்.