Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.01.2024

Advertisements

மேஷம்

 

இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். அதனை சமாளிப்பதற்கு கால தாமதமாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல. சில சௌகரியங்களை விட்டுகொடுக்க நேரும். கூடுதல் பணிகள் காரணமாக குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. பணிகளின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உறவில் நல்லிணக்கத்தைப் பேண அதனை தவிர்த்தல் நல்லது.வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரும். தேவையற்ற செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்படும். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.இன்று வெற்றிகரமான பலன்களை காண்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று பணிகள் நிலுவையில் இருக்கும். தாமதங்கள்காணப்படும்.உங்கள்துணையிடம் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள்.இதனை தவிர்த்தல் நல்லது. அமைதியாக இருக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை பராமரியுங்கள்.
இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். கடன்கள் வாங்க நேரலாம்.மன உளைச்சல் காரணமாக தோள்களில் வலி காணப்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி பெறலாம்.

 

மிதுனம்

 

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்களின் உறுதியும் தைரியமும் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மொத்தத்தில் இன்று காணப்படும் வளர்ச்சி உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.நீங்கள் உங்கள் துணையுடன் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.இன்று பணம் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டமான நாள். பண வரவு காணப்படும். உங்கள் மன உறுதி காரணமாக இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

கடகம்

 

இன்று உற்சாகமான நிலையை பராமரிப்பீர்கள். அதிக சிந்தனைகளை தவிர்த்தல் வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் அமைதி பெறலாம்.பணிகள் அதிகமாக காணப்படும். எனவே தவறுகள் நேரலாம். எனவே கவனமாகப் பணியாற்ற வேண்டும்.உங்களின் எரிச்சல் மனப்பான்மையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையை நட்பு முறையில் அணுக வேண்டும்.
கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

 

சிம்மம்

 

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தெளிவான மனதுடன் இருக்க வேண்டும். பணிகள் கடினமாக காணப்படும். பனியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் மனதில் தோன்றும் கசப்பு உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை கெடுக்கும்.இன்று கூடுதலான தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் கவலைகள் உண்டாகும். பண இழப்புகளும் காணப்படும்.முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலனைத் தரும்.

கன்னி

 

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். உங்கள் பணிகள் சுமுகமாக நடக்க நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நம்பிக்கை இழப்பீர்கள். நல்ல பலன்களைப் பெற நம்பிக்கையோடு இருங்கள்.இன்று அதிகப் பணிகள் காணப்படும். சக பணியாளர்களிடம் கவனமாகப் பழகவும்.நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.உங்கள் பிரியமானவரை புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள்.இன்று நிதிநிலை சீராக இருக்காது. இன்று நிதிநிலையை சமாளிப்பது கடினம்.கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

 

துலாம்

 

இன்று முன்னேற்றமான நாள். எதிர்காலம் பற்றிய பரந்த நோக்கு கொண்டிருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். இடையில் ஏற்படும் தடைகளை முறியடிப்பீர்கள். இன்று பலன் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றுங்கள். இதன் மூலம் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து தர இயலும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியம்.உங்கள் துணையிடம் நேர்மையாக விசுவாசமாக இருப்பீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.இன்று பணம் அபரிமிதமாக காணப்படும். இன்று வங்கியிருப்பை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். உங்கள் ஆற்றலை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.

 

விருச்சிகம்

 

இன்று சுமுகமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளை பயன்படுத்துவீர்கள். உங்கள் வளர்ச்சி இன்று உறுதி. இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் உங்கள் வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவீர்கள்.உங்களின் நம்பிக்கை உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.இன்று பணபுழக்கம் சீராக இருக்கும். உங்கள் ஆற்றலை நிதி வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள். இன்று ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது. நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

 

தனுசு

 

இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். இதனால் உங்களின் தொடர்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.கூடுதல் பணிகள் காரணமாக இன்று மும்மரமாக காணப்படுவீர்கள். பணிகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் திறமையான முறையில் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்
உங்கள் துணையுடன் கருத்து வேற்றுமை அல்லது விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நட்பாக பழக வேண்டும்.இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். பணம் வருவதற்கான அதிர்ஷ்டம் குறைவு.தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

 

மகரம்

 

இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடிய கடினமான சூழ்நிலை காணப்படும். நம்பிக்கையுடன் சவால்களைக் கையாள வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. பணிகளை முடிப்பதில் தாமதங்கள் நேரலாம். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.உங்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம் உங்கள் துணையிடம் நல்லுறவை கொண்டிருப்பீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்த முடியும்.இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பிரியமானவரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்.

கும்பம்

 

இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று பலன் தரும்.உங்கள் தனித் திறமைக்காக பாராட்டப்படுவீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் பிரியமானவரை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருங்கள்.
இன்று பணப்புழக்கம் திருப்தி அளிக்கும். உங்கள் சேமிப்பு திறன் அதிகரிக்கும். லாபம் தரும் புதிய முதலீட்டு முயற்சிக்கான திட்டங்களை வகுக்ககலாம்.இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உயர்ந்த ஆற்றலும் உறுதியும் உங்களிடம் காணப்படும்.

 

மீனம்

 

இன்று நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய திட்டங்களை வகுப்பீர்கள்.பணியிடச் சூழல் முன்னேற்றகரமான பலன்களைத் தரும். கூடுதல் ஊக்கத் தொகை அல்லது சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.பணியில் காணப்படும் பதட்டம் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். இருவரிடையே நல்லுறவு ஏற்பட விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இன்று பணபுழக்கம் சிறப்பாக காணப்படும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் உயரும். நிதி பாதுகாப்பு காணப்படும்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

 

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *