Silambarasan TR: இலங்கை பெண்ணுடன் திருமணம்?

Advertisements

நடிகர் சிம்பு தன்னுடன் இணைந்து நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன்  2002-ம் ஆண்டில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பின்னர் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பின்னர் பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனினும் தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கிறர். இதனால் இவர் திருமணம் குறித்து அவ்வபோது சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

முன்னதாக சிம்பு நயன்தாராவும் காதலித்து வந்தானர். ஆனால் இருவரும் பின்னர் பிரேக் அப் செய்துவிட்டனர். பின்னர் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் ஹன்சிகாவும் பிரேக் அப் செய்து விட்டார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும் சிம்புவும் காதலித்து வருகின்றனர் எனவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று வேகமாக தகவல் பரவியது. எனினும் அது வெறும் வதந்தியாகவே இருந்தது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தேருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவதால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறாராம். இதற்காக சிம்புக்கு தீவிரமாக பெண் தேடி வருகிறாராம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *