Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 31.01.2024

Advertisements

மேஷம்

 

உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரும்பும் பலன் கிடைக்கும். இன்று எதிர்பாராத சில நன்மைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.இன்று நீங்கள் விரைவாகப் பணியாற்றுவீர்கள்.அதையும் எளிதாக ஆற்றுவீர்கள்.உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை கழிப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
இன்று ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மனதில் குழப்பம் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். அமைதியைப் பராமரிக்க வேண்டும்.
செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.இருமல் அல்லது தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

 

மிதுனம்

 

உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் இலட்சியங்களை அடைய நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். வாழ்வில் வரும் மாற்றங்களை நடைமுறைப்படுத்த தைரியமாக இருங்கள்.உங்களது தற்போதைய பணியில் திருப்தியின்மை காணப்படும். மேலும் உங்கள் வளர்ச்சிக்காக பணி மாற்றம் விரும்புவீர்கள்.உறவில் புரிந்துணர்வை பராமரிக்க உங்கள் துணையை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இன்று குறைந்த அளவு பண வரவே காணப்படும். அதிக பொறுப்புகள் காரணமாக அதிகமாக செலவு செய்ய நேரும்.கண் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்

 

இன்று வாய்ப்புகள் நிறைந்து காணப்படும். என்றாலும் முடிவெடுக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் எளிதாக பணியாற்றுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். ஊக்கத்தொகையாக பண வரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை ஒன்றாக இணைந்து பகிர்ந்து மகிழ்வீர்கள்.
இன்று பண வரவு திருப்திகரமாகவும் போதுமானதாகவும் இருக்கும்.பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது.

 

சிம்மம்

 

தகவல் பரிமாற்றங்களை கவனமாகக் கையாள வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். பொறுமையைக் கையாள வேண்டும்.சில பணிகள் குறித்தநேரத்தில் முடியாது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்க திறமை தேவை.நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு அந்த உணர்வை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் அமைதியின்மை ஏற்படும்.நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்காது. அதிக செலவினங்கள் காணப்படும்.பல் வலிக்கான சாத்தியம் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.

கன்னி

 

நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் சிறந்த வாய்ப்புகளை கடைசி நிமிடத்தில் இழப்பீர்கள். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள மிகுந்த முயற்சி தேவை.தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பணியில் அதிக கவனம் தேவை. பொறுப்புக்களின் காரணமாக இன்று பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள்.உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உறவில் நட்பான அணுகுமுறை சிறந்தது.செலவுகள் அதிகமாக இருக்கும். நிதிநிலையில் சமநிலையைப் பராமரிப்பது இன்று கடினமாக உணர்வீர்கள்.சளி அல்லது இருமல் பாதிப்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

துலாம்

 

தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால் உங்கள் வளர்ச்சி குறையும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலட்சியத்தைக் கொள்ள வேண்டும்.உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்காது. இது உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறந்த முறையில் பணியாற்றுங்கள்.உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இருவரும் மற்றவர்களின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும்.இன்று நிதி வளர்ச்சி காணப்படாது. செலவுகள் அதிகமாக காணப்படும்.கால் வலியால் அவதிப்படுவீர்கள். முறையான உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

விருச்சிகம்

 

தைரியத்துடனும் உறுதியுடனும் முன்னேறுவீர்கள். இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் காணப்படும். உங்களுக்கு கொடுத்த வேலையை குறித்தநேரத்திற்குள் முடிப்பீர்கள்.உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.நிதிநிலைமை இன்று சிறப்பாக இருப்பதன் காரணமாக உங்களின் சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

தனுசு

 

இன்று அனுகூலமான நாள். நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.
உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இருவருக்குமிடையே மகிழ்ச்சி காணப்படும்.உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.இன்று ஆரோக்கியம் தடையாக இருக்காது.

 

மகரம்

 

இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்காது. என்றாலும் உங்கள் கடின முயற்சி மூலம் உங்கள் திறமைகளை நிரூபிக்கலாம். தடைகளைக் கண்டு லட்சியத்திலிருந்து விலகாதீர்கள்.பணியில் தவறுகள் நேரலாம். இதனால் உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகலாம். சிறிது கவனமுடன் இருக்கவும்.உங்கள் துணையுடன் கடுமையாகப் பேசுவீர்கள் அல்லது வன்மையுடன் நடந்து கொள்வீர்கள். இது உங்கள் மகிழ்ச்சியை கெடுக்கும்.எனவே இதனை தவிர்த்தல் வேண்டும்.இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். நிதிநிலைமையில் ஸ்திரத்தன்மை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நீரைப் பருகவும்.

கும்பம்

 

சிக்கல்களில் சிக்காமல் இருக்க இன்று உங்கள் செயல்களில் பொறுமை தேவை.இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.உங்கள் சக பணியாளர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படும். இதனால் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தடைகள் இருக்கும்.உங்கள் துணையுடன் தொடர்பு கொள்கையில் கவனம் தேவை. எரிச்சலூட்டும் நடத்தை அல்லது கடுமையான வார்த்தைகள் உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.அதிக உடல் உழைப்பின் காரணமாக கால் வலி ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும்.

 

மீனம்

 

இன்றைய நாளின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.உங்கள் பணியில் திருப்தி கிடைக்கும். சகபணி யாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வர்கள். இதனால் உறவின் பிணைப்பு வலுப்படும்.நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *