Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.09.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 28.09.2023

 

இன்றைய பஞ்சாங்கம்

28-09-2023, புரட்டாசி 11, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.49 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.48 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம்


இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

ரிஷபம்


இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள். உறவினர்கள்மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்


இன்று உங்களுக்குப் பணவரவு சுமாராகத் தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்


இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்


இன்று நீங்கள் எந்தச் செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோக ரீதியாகச் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி


இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்குக் கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்


இன்று உங்களுக்குத் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும்.

தனுசு


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

மகரம்


இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கும்பம்


இன்று உங்களுக்குத் தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்


இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *