Mobile vegetable Shop: நடமாடும் காய்கறி கடை!

Advertisements

கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், கூட்டுறவு துறை சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் வாயிலாக, குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன.

மிக்ஜான் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கியது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள வெள்ள நீரை அகற்ற மாநகராட்சி சார்ப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறுபகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் தவிக்கின்றனர்.

இந்தநிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், கூட்டுறவு துறை சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் வாயிலாக, குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கூட்டுறவு துறை விடுத்த செய்தி குறிப்பு:கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவுறுத்தல்படி, 10 நடமாடும் கடைகள் துவக்கப்பட்டு, மணலி, மாதவரம், பெருங்குடி, பள்ளிக்கரணை, வேளச்சேரியில் வசிக்கும் மக்களுக்கு, 1 பிஸ்கட் பாக்கெட், 1 லிட்டர் குடிநீர் பாட்டில், ரொட்டி பாக்கெட், பால் பவுடர் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டன.

இவற்றுடன், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
நாளை முதல் கூடுதல் வாகனங்களில், மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *