Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 14.09.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 14.09.2023

இன்று பண வரவு சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூடத் தாமதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கு ஏற்றப் பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இன்று உங்களுக்குப் பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்தச் செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.

இன்று உற்றார் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.

இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவை இல்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

இன்று உங்களுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று உங்களுக்குத் தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *