
சொகுசுப் பேருந்தா…ஜல்சா பேருந்தா…
ஆம்னி பஸ்களில் நடக்கும் ஆபாசம்….
அரசுப் பேருந்துகளைவிட தனியார் ஆம்னி பேருந்துகளில் இருக்கை, திரை, குளிர் சாதன வசதி கும்மென்று வரும் வாசனை, படுத்துறங்க மெத் மெத்துனு பெட், ஒவ்வொரு படுக்கைக்குமிடையில் ஸ்கீரின், அவ்வளவு தான் ஏறக்குறைய ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் போல இருக்கும்.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் , முக்கியமாக இரவுப் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காகத் தனியார் பேருந்துகள் இத்தனை வசதிகளைச் செய்து கொடுத்து அதற்குற்ய கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறது.
பயணிகள் இதனை நிம்மதியான, சோர்வில்லாத குளிர்சாதன வசதியுடன், நல்ல உறக்கத்திற்கு பயன்படுத்துகிறார்களா என்றால் அது தான் இல்லை. எல்லா பயணிகளையும் சொல்லவில்லை. குறிப்பாக இளம் வயது ஆண்களும், பெண்களும் கொஞ்சம் கூட வெட்கம், இல்லாமல் பொது இடம் என்று கூட நினைக்காமல் தங்கள் காம லீலைகளைப் பேருந்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.
அனைத்து வயதினரும் பயணம் செய்யும் இடத்தில் இப்படி கேவலமான செயலில் ஈடுபடுவதால், வயது மூத்தவர்களும், குடும்பத்துடன் செல்பவர்களும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. அதிலும் பருவ வயதுப் பெண்கள், கல்லூரி மாணவிகள், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இப்பேருந்துகளீல் செல்லும்போது மன ரீதியாக அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் அப்பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு குறித்த பயமும் உண்டாகிறது.
பேருந்திலேயே மது அருந்துவது, சத்தமக பாட்டு இசைப்பது, குத்துப் பாட்டு, நடனம் இவையெல்லாம் ஆண்கள் மட்டும் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். பெண் பிள்ளைகளும் சேர்ந்தே இவை அனைத்தும் செய்து சக பயணிகளுக்குத் தொல்லை கொடுத்துத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிகவும் வேதனை அடைந்து நொந்து போயுள்ளனர். இவர்கள் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல…அவர்கள் இதுபற்றிக் கூறும்போது இந்தப் பஸ்ஸை, காலேஜ் பிள்ளைகள் லாட்ஜ் போல் பயன்படுத்துகிறார்கள். ஹோட்டல்ல ரூம் புக் பண்ணா போலிஸ் ரெய்டு இருக்கும். ஆனால் ஆம்னி பஸ் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரம்… எங்களால் இதுகுறித்து கேட்க முடியாது… பஸ் காலியான பிறகு பார்த்தால் அவர்கள் செய்த அக்கிரமங்கள் தெரியும்… காண்டம்ஸ் முதற் கொண்டு அங்கு இருக்கும். எங்களால் ஏதும் கேட்க முடியாது . வாயிருந்தும் ஊமைகளாக்கப்படுகிறோம் … எனப் புலம்பித் தீர்த்தனர்.
இந்தப் பிரச்னைக்கு என்ன தான் முடிவு. ஒன்று பொது இடம் என்று நினைத்து அவர்களாக் திருந்த வேண்டும். அரசும் சோதனை மேற்கொள்ளலாம்.
பேருந்தைப் பயணத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.
சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள் இளசுகளே….


