Advertisements

மேஷம்

உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும்.உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைக்கலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படும். கூடுதல் பணிகள் உங்களுக்குச் சுமையாகத் தெரியும். உங்களை நிரூபிக்க நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.உங்கள் துணையிடம் அகந்தை போக்கைக் காண்பிப்பீர்கள். உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்பட நட்பான அணுகுமுறை மற்றும் மனம் திறந்த பேச்சு அவசியம்.அதிக பொறுப்புகள் காரணமாகத் தேவையற்ற செலவுகள் ஏற்படும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.மூட்டுகள் மட்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று சிறிது பதட்டமாக இருப்பீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் குணம் பெறலாம்.
ரிஷபம்

இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். உங்களின் திறமைமூலம் இன்று முன்னேற்றகரமான பலன்கள் காண்பீர்கள். நீண்ட கால திட்டம் அமைக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும்.இன்று பணியில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாள். இன்று அபாரமான திறமையை வெளிபடுத்துவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
இன்று அன்பிற்கும் காதலுக்கும் உரிய நாள். உங்கள் நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுமூலம் உங்கள் பிரியமானவரை மகிழ்விப்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி காணப்படும். உங்கள் நிதி மற்றும் பயனுள்ள முதலீடுபற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றலும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.
இன்று அன்பிற்கும் காதலுக்கும் உரிய நாள். உங்கள் நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுமூலம் உங்கள் பிரியமானவரை மகிழ்விப்பீர்கள். இன்று நிதி வளர்ச்சி காணப்படும். உங்கள் நிதி மற்றும் பயனுள்ள முதலீடுபற்றி இன்று விரைந்து முடிவெடுப்பீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆற்றலும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.
மிதுனம்

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாகச் சுய முனேற்றப் பாதையில் செல்வீர்கள். இன்று அனைத்துவிதத்திலும் சிறப்பான நாள். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.பணியில் உங்கள் கூடுதல் திறமைகளை மேம்படுத்துவீர்கள்.நீங்கள் உங்கள் துணையிடம் அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள முடியும். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள் பெறுவீர்கள்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் மிகுந்த மன ஆற்றல் காரணமாக இன்று முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கடகம்

இன்று சிறிது மந்தமாகக் காணப்படுவீர்கள். எனவே அதனை மாற்றித் துடிப்புடன் செயல்பட வேண்டும். நேர்மறையான கண்ணோட்டம் கொள்ளுங்கள்.உங்கள் பணிகளைத் திறமையாக ஆற்றுவதில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். சக பணியால்ர்களுடனான தொடர்பு அனுகூலமாக இருக்காது. உங்கள் துணையுடன் சூடான விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.இன்று ஏற்படும் அதிக செலவுகள் தவிர்க்க முடியாதது. எனவே செலவுகளைக் கட்டுபடுத்துங்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.முதுகு வலி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.
சிம்மம்

உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும்.உங்கள் செயல்களை முறைப்படுத்தி ஆற்றுவதன் மூலம் இழப்பு ஏற்படாமல் இருக்கும்.நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் சிறிய விஷயங்களைக் கூடப் பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள். இதனைத் தவிர்த்து உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.இன்று செலவுகள் அதிகமாகக் காணப்படும். நீங்கள் திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும்.தேவையற்ற கவலை மற்றும் தோல் எரிச்சல் காரணமாக நீங்கள் முந்தைய இரவு தூக்கமின்மையால் பாதிக்கப் பட்டிருப்பீர்கள்.
கன்னி

இன்று துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும். நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்வதில் முனைவீர்கள். இன்று உங்களுக்கெனச் சிறப்பம்சத்தை உருவாக்குவீர்கள்.உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். சரியான நேரத்தில் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் காரணமாக முன்னேற்றம் அடைவீர்கள்.உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இருவருக்கிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். இருவரும் பொருத்தமான ஜோடியாக இருப்பீர்கள்.இன்று அதிக அளவில் பணம் காணப்படுவதால் சிறப்பான நாளாக இருக்கும். இந்தப் பணம் ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் கிடைக்கும்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இன்று முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
துலாம்

இன்று சோதனையான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலையின்றி அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினம். சிறிய செயல்களை முடிக்கக் கடுமையான முயற்சி தேவைப்படும். சக பணியாளர்களுடனான உறவு நல்லுறவாக இருக்காது.உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது முற்றிலும் தேவையற்றது. எனவே நட்பான அணுகுமுறையோடு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.இன்று முதுகுவலி வாட்டும். பதட்டமும் குழப்பமும் காணப்படும்.
விருச்சிகம்

ஆன்மீக விழிப்புணர்வும் ஈடுபாடும் மகிழ்ச்சி அளிக்கும். இன்று அனுபவத்தின் மூலம் பாடம் கற்க நேரலாம்.பணி வளர்ச்சி சராசரியைவிட சற்று கூடுதலாக இருக்கும். இன்று அதிக பணிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். நிபுணர்களின் ஆலோசனை பெறுங்கள்.உறவுப் பிணைப்பு வலுவற்றதாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க நட்பான அங்குமுறை மேற்கொள்வது சிறந்தது.இன்று நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.அதன் வேகத்தில் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். எனவே திட்டமிட்டு செயல்படுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கால் வலி மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதியான அணுகுமுறை மேற்கொள்ளவும்.
தனுசு

முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுங்கள். இன்று தைரியம் குறைந்து காணப்படும். உங்கள் உணர்ச்சியுடன் போராடி உங்கள் சுய முன்னேற்றத்திற்கு முயல வேண்டும்.உங்கள் பணியில் தவறுகள் ஏற்படும். இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.உங்கள் துணையுடன் உங்கள் நண்பர் இல்ல விழாவிற்கு செல்லத் திட்டமிடிருப்பீர்கள். பதட்டமான சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்தல் நல்லது.இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். வறுத்த மற்றும் கார உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
மகரம்

இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்கள் செயல்களில் வெளிப்படும் தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க இயலும்.உங்கள் தனித்த திறமைமூலம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணியில் வெற்றி பெற வேண்டுமென்ற உறுதி உங்கள் அணுகுமுறையில் காணப்படும்.உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை உண்மையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஸ்திரமான நிதிநிலை ஏற்படுத்த உங்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சேமிப்பு திட்டத்தில் கலந்து கொள்வீர்கள்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் தைரியமாகவும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.
கும்பம்

இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். முக்கிய முடிவுகள் இன்று உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.பணியிடத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எந்தச் சவால்களையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் இருவரிடையே உறவுப் பிணைப்பு வலுப்படும்.இன்று உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை கிடைக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உறுதி காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிபீர்கள்.
மீனம்

இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மகிழ்ச்சி குறைந்து காணப்படும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பணிகளைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்து மேற்கொள்ள வேண்டும். சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை காணப்படும். உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினை ஏற்படலாம். நல்லுறவு ஏற்பட இத்தகைய உணர்வுகளைத் தவிர்த்தல் நல்லது.நிதிநிலை இன்று மகிழ்சிகரமாக இருக்காது. உங்கள் நிதிநிலையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.பதட்டம் மற்றும் அசௌகரியம் காரணமாக இன்று உங்களுக்கு முட்டி வலி பாதிப்பு ஏற்படும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

