Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 04.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 04.10.2023

 

இன்றைய பஞ்சாங்கம்

04-10-2023, புரட்டாசி 17, புதன்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 05.41 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம்


இன்று உங்களுக்கு உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்


இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்


இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள்மூலம் உதவிகள் கிடைக்கும்.

கடகம்


இன்று உங்களுக்குப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாகப் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்


இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாகச் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

கன்னி


இன்று உங்களுக்குப் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்திற்காகச் சிறு தொகை செலவிட நேரிடும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

தனுசு


இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்


இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்


இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபாடு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் மனஉளைச்சல் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மீனம்


இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *