Today Rasi Palan -இன்றைய ராசிபலன் – 28.10.2024

Advertisements

Today Rasi Palan – 28.10.2024

Advertisements

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 06.22 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி: இன்று காலை 10.27 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.15 – 7.15

நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45

ராகு காலம் காலை: 07.30 – 09.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை மாலை: 1.30 – 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.15 – 10.15

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 – 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டம் உத்திராடம், திருவோணம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவர். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பிரபல பங்குச் சந்தைமூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்


வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்


சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாகப் பேச வேண்டாம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்


எதிர்காலத்திற்காக ஒரு தொகையைத் தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்குப் பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். பெண்களுக்குச் சளி தொந்தரவு வந்து போகும். பெரிய அளவில் பிரச்சினை இல்லை. அரசாங்க வேலை அனுகூலகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்


தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். பயணங்களால் ஆதாயம் உண்டு. மாணவர்கள் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி


புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதிலிருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்

துலாம்


எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

விருச்சிகம்


கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு


வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள் பெங இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்


இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்தப் பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்


அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்


இரவில் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *