Today Gold Rate In Chennai: நேற்று ரூ.840 எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன? உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,360-ஆகவும், கிராம் ரூ.6,670-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 18) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,670-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.7,125-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,000-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *