விவசாயிகளை பாதுகாக்க முதல்வர் விஜய்க்கு எடப்பாடி கோரிக்கை.!

அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க கனவு காணும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் அவர்களை காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளைக் காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *