ஒரு சொட்டு எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை..!

ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் தெரிவித்துள்ளார்.

 ஈரான் அரசு, ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறிச் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  ஈரான் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி பயணிக்கும் சரக்குக் கப்பல்களின் எதிர்கால பயணங்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கப்பலை சிறைபிடிக்கவோ நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்குப் பிற நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *