எடப்பாடி இருக்கும் வரை அதிமுக வெற்றி பெறாது : செங்கோட்டையன் விமர்சனம்.!

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளயத்தில் தவெக சார்பில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இதே இடத்தில் தேர்தலின் போது செங்கோட்டையன் நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார்.
ஆனால், தற்போது அவரே சட்டமன்றத்தில் தனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார் என்று விமர்சித்தார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தன்னால் கணிக்க முடியும், அதனால்தான் தவெகவில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இணைந்ததாகக் கூறினார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் கொடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வேண்டாம் என கூறியதாகத் தெரிவித்தார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும் என்று கூறினார். அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளதாகவும், அதில் இன்னும் 10 பேர் தங்கள் தவெக கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள் என்று கூறினார். இதை நான் சொல்லவில்லை, கட்சியில் இருப்பவர்கள் தன்னிடம் கூறி வருவதாகத் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *