Advertisements

குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ செயலி மூலமாகவும் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு இரண்டுக்கான முதல் நிலைத் தேர்வு 1.11.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
Advertisements


