சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவியில் காலியாக உள்ள 59 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழி தேர்வு கடந்த ஜூலை 1ம் தேதி நடந்தது. எழுத்து தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் 12,254 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Related Posts

புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!
- Web Team
- January 22, 2025
- 0
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக உள்ளது. வாரத் தொடக்க நாளான […]

ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி..!
- Web Team
- May 28, 2026
- 0
ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஐதராபாத்தை […]
D. K. Shivakumar: தண்ணீர் திறக்க மறுப்பு!
- Web Team
- October 30, 2023
- 0
தமிழகத்திற்கு தற்போத கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை. கர்நாடகா அணைகளில் மொத்தமாக […]
