டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களின் கனவு நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்திரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தி.மு.க. மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு, இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என்றும், 9-ஆயிரம் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும், இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு, இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம் எனவும், தமிழிசை-சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில், அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் போது, எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை என்றும், தமிழிசை சௌந்திரராஜன் குறிப்பிட்டுள்ளார்..


