Advertisements

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தபோது, 3 ஓவர்கள் முடிவில் மழை பெய்ததால் 40 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 19 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன்படி, திருச்சி அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. இதில், சுரேஷ்குமார் 60 ரன்களும், ராஜ்குமார் 71 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், திருச்சி அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Advertisements


