மேகதாது கட்டும் திட்டத்துக்காக 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டம்.!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்துக்காக, கர்நாடக அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 12,500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட உள்ளதாகவும், அங்குள்ள சுமார் 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் மற்றும் காவிரி நீர்பாசனப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக, தட்சிண கன்னடா மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்களின் வனப்பகுதிகளில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும் என்றும் கர்நாடக அரசு தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *